கோடைகால நீர் மோர் பந்தலை கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்தார்.
கோடைகால நீர் மோர் பந்தலை திறக்க திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், திண்டுக்கல் வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன் தலைமையில், வெள்ளை விநாயகர் கோவில் எதிரே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதனை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்தார். உடன் மாநகர செயலாளர் ராஜப்பா, துணைச் செயலாளர் இளமதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கு பகுதி செயலாளர் பஜூலுல் ஹக் தலைமையில் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலையும், கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலையும், தெற்கு பகுதி செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் நாகல்நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலையும் ஐ.பி.செந்தில் குமார் திறந்து வைத்தார். உடன் துணை செயலாளர் பிலால் உசேன் உள்ளிட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment