திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா கண்மாயில் இறங்கி ஆர்வமாக மீன்பிடித்த கிராம மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் மந்தைகுளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டும் கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். அதையொட்டி மீன்பிடி திருவிழாவானது தொடங்கியது. இதற்கு வெளி மாவட்டமான சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கன்னியாபுரத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. இந்த மீன்கள் ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை கிடைத்ததால் கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment