சேர்வீடு வேட்டைக்காரன் சுவாமி திருவிழா - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 11 April 2023

சேர்வீடு வேட்டைக்காரன் சுவாமி திருவிழா

 


நத்தம் அருகே சேர்வீடு வேட்டைக்காரன் சுவாமி திருவிழா

சர்வ அலங்காரத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் உள்ளது வேட்டைக்காரன் சுவாமி கோயில். இந்த கோயிலில் நடைபெறும் விழாவையொட்டி  மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் வேட்டைக்காரன் சுவாமி மற்றும் குதிரை, மதலை சிலைகள்,  செய்யப்பட்ட நிலையில் நத்தத்தில் செந்துறை செல்லும் சாலைப்பகுதியில் உள்ள அவுட்டரை சென்றடைந்தது. அங்கு வைத்து சுவாமிக்கு  கண் திறப்பு நிகழ்ச்சி யை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடனும் தீவட்டி பரிவாரங்களுடன் வேட்டைக்காரன் சுவாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். இது மாரியம்மன் கோயில், பெரியகடை வீதி, காசுக்காரசெட்டியார் தெருவிலுள்ள அண்ணாமலை செட்டியார் இல்லம், தெலுங்கர் தெரு காளியம்மன் கோயில், மார்க்கெட் வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் வந்து காட்சி தந்து சேர்வீட்டிலுள்ள கோயிலை சென்றடைந்தது. அப்போது பக்தர்கள் ஆங்காங்கே திரண்டு சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேர்வீடு கிராமத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad