திண்டுக்கல் உழவர் சந்தை அருகே திமுக ஒன்றிய கழகம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு.
திண்டுக்கல் அருகே உழவர் சந்தை எதிரே திண்டுக்கல் திமுக வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை, திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர், திராட்சை, வெள்ளரி, மற்றும் பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன், ஒன்றியக் குழுத் தலைவர் ராஜா, பாலகிருஷ்ணாபுரம் முன்னாள் ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, அணைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி பாண்டித்துரை, அழகு பொன்னையா,
மற்றும் ஒன்றிய கழக கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment