உலக கோப்பை போட்டிக்கு வழி அனுப்பும் விழா.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உலக கோப்பை ரோல்பால் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி
வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த பிரதீப் மற்றும் சுஷ்மிதா ஆகிய இருவரும் இந்திய அணியில் பங்கேற்று விளையாட உள்ளனர். இவர்கள் சிறந்த முறையில் விளையாடி வெற்றி பெற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தென்னிந்திய செயலாளர் சுப்பிரமணியம், மாநிலச் செயலாளர் கோவிந்தராஜு, மாஸ்டர் பிரேம்நாத் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment