ஆத்தூர் அரசு பள்ளி மாணவி அமெரிக்கா பறக்க உள்ளார்.
அரசு பள்ளி மாணவ மாணவியரிடம் கலைத்திருவிழா மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. திறமைகளை வெளிக்காட்ட நல்ல ஒரு களமாக அமைந்தது. ஆர்வமுடன் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் மற்றொரு பகுதியாக கல்வி சாரா மன்ற செயல்பாடுகளை அரசு பள்ளியில் 6-9 வகுப்பு மாணவர்களிடம் ஊக்குவிக்கும் முகமாக இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம், வானவில் மன்றம், வினாடி-வினா சார்ந்து பள்ளியளவில், ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சிறார் திரைப்படம் சார்ந்து மட்டும் தனிநபர், குழு போட்டியென இதில் ஏழு வகை போட்டிகள் நடைபெற்றன.
இதில், "திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல்" என்ற தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ம.கீர்த்தனா மாநில அளவில் சென்னையில் இறுதிப் போட்டி மற்றும் ஆறு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். கீர்த்தனா உள்ளிட்ட 14 பேர் அடங்கிய குழு முதலிடம் பெற்றது. இதன் வாயிலாக அடுத்த மாதம் அமெரிக்க செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
கீர்த்தனா பெற்றோர் மதனகோபால்- ராஜேஸ்வரி. பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகின்றனர். கீர்த்தனா அக்கா புவனா மேல்நிலைக் கல்வி முதலாம் ஆண்டு படிக்கிறார், தம்பி ஜீவானந்தம் நான்காம் வகுப்பு படிக்கிறார்.
கீர்த்தனா தெரிவித்தது;-.
இப்பிவுகளில் போட்டி நடைபெறுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிவித்து அதற்கு தக்க வழிகாட்டி உதவி ஊக்குவித்தனர்.
மாவட்ட அளவில் தேர்வாகி சென்னையில் ஆறு நாள் முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றது நல்ல ஒரு அனுபவமாக அமைந்தது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கி வருவது சிறப்பானதாகும். அரசு பள்ளியில் படிக்கும் ஒரு சாதாரண குடும்பத்து மாணவியும் சாதிக்க முடியும். மேல்நிலைக் கல்வி முடித்த பின்பு அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பிரிவில் படித்து பட்டம் பெற்று எதிர்காலத்தில் திரைத்துறையில் சேவையாற்ற விரும்புகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்க செல்ல தேர்வாகியுள்ள மாணவியை மாவட்ட தொடக்க கல்விஅலுவலர் வளர்மதி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தேவ ஆரோக்கியதாஸ், ஆண்டவன், பள்ளி தலைமை ஆசிரியை பொற்செல்வி, உதவி தலைமை ஆசிரியை தங்கா கண்மணி ஆசிரியைகள் ஜோஸ்பின் சீலி, ஜாக்குலின் லீமா, பள்ளி மேலாண்மை குழு தலைவி பாரதி, நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment