திண்டுக்கல்லில் சமரச மையம் சார்பில் சமரசம் நாடுவீர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச மையம் சார்பாக சமரசம் நாடுவீர் சமரச விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி நீதிபதி சிவ கடாட்சம் கொடியை செய்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை நீதிபதிகள் வழங்கினர். மேலும் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஜி.டி.என் சட்டக் கல்லூரி மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். இந்தப் பேரணி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துவங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முடிவடைந்தது. இதில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment