ஆர்ப்பாட்டத்தில் நீதிபதியின் நாக்கை அறுப்பேன் என்று கூறிய மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கடந்த 6-ம் தேதி மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.வர்மாவின் நாக்கை அறுப்பேன் என்று கூறிய மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மணிகண்டன், நகர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் காவல் நிலையம் உள்ளே அழைத்து சென்றனர். பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment