திண்டுக்கல்லில் மீண்டும் மஞ்ச பை விழிப்புணர்வு பிரச்சாரம் மாணவர்கள் மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி இல்லா திண்டுக்கல் மாவட்டமாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்தி
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்
ஜி.டி.என் கலைக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மஞ்ச பையை கையில் ஏந்தியும், அதன் அவசியம் குறித்தும் தப்பாட்டம் அடித்து விழிப்புணர்வு பாடல்களை பாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் மாசுக்கட்டுப்பாட்டு முதன்மை பொறியாளர் மணிமாறன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment