பழனியில் உள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரியில் வருகின்ற 11ம் தேதி மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ச.விசாகன் தகவல்.
தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாக மாபெரும் தமிழ்க்கனவு – தமிழர் மரபு மற்றும் பண்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழர் பண்பாட்டின் பெருமையை உணர்த்தும் விதமாக வளர்ச்சியை ஜனநாயகப்படுத்துதல் என்னும் தலைப்பின் கீழ் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் மற்றும் அறிவை விரிவு செய் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் தலைப்பின் கீழ் மு.குணசேகரன் நிகழ்த்திட உள்ள மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி பழனி நகரில் உள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரியில் 11.04.2023 செவ்வாய் கிழமை அன்று முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியின் போது புத்தகக் கண்காட்சி,
நான் முதல்வன் தொழில் திட்டங்களைக் காட்சிப்படுத்துதல், கல்விக் கடன் முகாம், முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் வங்கிக் கடன் வாய்ப்புகள் குறித்து விளக்குதல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுப் பொருட்கள் விற்பனை போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளன என மாவட்ட முனைவர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment