கொடைக்கானலில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் திணறும் சுற்றுலா வாகனங்கள்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன்காரணமாக அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நுழைவுவாயில் பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மூஞ்சிக்கல், உகாதே நகர் , ஏரிச்சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment