திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகின்ற 15ம் தேதி ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு.
ராகுல் காந்தி சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும் மேலும் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்க்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு மாதகாலம் பல்வேறு போராட்டங்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்
திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் கூறுகையில்:- மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்த உள்ளோம். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆர்ப்பாட்டம், சத்யாகிரக போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஏப்ரல் -11ம் தேதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம், 15ம் தேதி 500 பேர் பங்கேற்று மாபெரும் ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்று கூறினார். உடன் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, மச்சக்காளை உள்ளிட்ட கட்சியினர் பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment