ராகுல் காந்தி கைது மற்றும் எம்பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் காங்கிரஸ் எஸ்சி/எஸ்டி பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி மீது அவதூரு வழக்கு தொடரப்பட்டு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையும், அதனை தொடர்ந்து அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்சி/ எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்
திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், முன்னாள் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது சித்திக், மாவட்ட மாநகர மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, அம்சவள்ளி, மாநகர மாவட்ட துணை தலைவர் அப்துல் ரகுமான், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மண்டல தலைவர் நாகலட்சுமி, மாணவர் காங்கிரஸ் தலைவர் அமீர் அம்ஜா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment