தாடிக்கொம்பு காவல் நிலைய கஞ்சா வழக்கில் தேவாரம் பகுதியில் பதுங்கி இருந்த பிரபல கஞ்சா வியாபாரியை கைது செய்த ஐ.ஜி.தனிப்படையினர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த முருகன் என்ற குரு முருகன்(39) என்பவர் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இது குறித்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில், போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இருந்து தேவாரம் பகுதிக்கு முருகன் என்ற குரு முருகன் வந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஐஜி தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் தேவாரம் பகுதியில் பதுங்கி இருந்த குரு முருகனை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment