வேடப்பட்டி பகுதியில் வெள்ளைப்பூண்டு வியாபாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை சென்னையில் கைது செய்து சிறையில் அடைத்த தாலுகா காவல்துறையினர்
திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி(33) இவரை கடந்த மாதம் 2ம் தேதி பட்ட பகலில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து யுவராஜ், விக்குனு என்ற விக்னேஷ், மகேந்திரன், ஆரோக்கிய ஜெரோம், லிடியா மேரி ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான மரியசெல்வி(58) என்பவர் தலை மறைவாக இருந்தார். இதனை அடுத்து தாலுகா காவல் ஆய்வாளர் பாலாண்டி தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த மரிய செல்வியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment