திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.25,31,167, 247 கிராம் தங்கம், 1 கிலோ 380 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் கடந்த மாதம் நடைபெற்ற மாசித் திருவிழாவையடுத்து திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை எண்ணப்பட்டன. தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட 100 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணப்பட்டதில் ரொக்கமாக 25 லட்சத்து 31 ஆயிரத்து 167 ரூபாயும், 247 கிராம் தங்கம், 1 கிலோ 380 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment