திண்டுக்கல்லில் கோடைக்கால நீச்சல் பயிற்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை,18ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை,மே மாதம் 2ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை, 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை, 30ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. பயிற்சி கட்டணம் ரூ.1500 மேலும் கூடுதலாக ஜிஎஸ்டி 18 சதவீதம் கட்ட வேண்டும்.
மாணவ-மாணவிகளுக்கு தினந்தோறும் காலை 7 மணிமுதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், பெண்களுக்கு மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலும் ஒரு நாளைக்கு தலா ஒரு மணிநேரம் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment