ரமலான் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட பொறுப்புக் குழு எஸ்டிபிஐ கட்சி சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச சேலைகள் மற்றும் வேஷ்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பொறுப்புக் குழு தலைவர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சையது முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், துளிர் அமைப்பு நிறுவனர் முகமது யூசுப் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்டோருக்கு சேலை மற்றும் வேஷ்டிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அபிராமி கூட்டுறவு தலைவர் பாரதிமுருகன், அதிமுக பகுதி செயலாளர்கள் சேசு, சுப்பிரமணி, மோகன், முரளிதரன்,
எஸ்டிபிஐ கட்சி பொறுப்புக்குழு உறுப்பினர்கள் லத்தீப், தௌபிக், தொகுதி நிர்வாகி சேட் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment