திண்டுக்கல்லில் 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேர வேலையை உயர்த்திய தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மில் தொழிலாளர்கள், டாஸ்மார்க் ஊழியர்கள், மின்சார வாரிய, ஊழியர்கள் போக்குவரத்து துறை ஊழியர்கள் என பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் வேலையை 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரமாக பணி நேரத்தை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்ததை கண்டித்து போராடி பெற்ற தொழிலாளர்களின் உரிமையை பறிக்கின்ற வகையில் சட்டங்களை இயற்றி முதலாளித்துவத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் விதமாக செயல்பட்ட திமுக அரசை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட தலைவர் பாலன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜாங்கம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மார்க், மின்சார வாரியத் துறை, மில் தொழிலாளர்கள் என பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment