திண்டுக்கல்லில் பழைய அறக்கட்டளை க்கு சப்ளிமெண்ட் டீட் உரிமம் பெற கையூட்டு கேட்டு தர மறுத்ததால் உரிமத்தை ரத்து செய்த பதிவாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
ஜிந்தா ரப்பானி பாவா
என்பவர் சிலப்பாடி விஸ்தரிப்பு பகுதியில் 2008 முதல் MNH டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்துள்ளார். இந்த அறக்கட்டளைக்கு சப்ளிமெண்ட் டீட் தேவைப்பட்டுள்ளது. அதற்காக இவர் திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் துணைசார் பதிவாளர் ராஜேஸ்வரியைச் சந்தித்து அனுமதி கேட்டு உள்ளார். இதற்கு துணை சார் பதிவாளர் இந்த அனுமதியை பெற பல விஷயங்களை மாற்றி மாற்றி கோரி அவரை பலமுறை அலைக்கழிப்பு செய்துள்ளார். பின்னர் அவரை புதிய அறக்கட்டளையை உருவாக்க ரூபாய். 11 ஆயிரம் கையூட்டு பெற்றுக் கொண்டு புதிய அறக்கட்டளையை உருவாக்கி கொடுத்துள்ளனர் . பழைய அறக்கட்டளைக்கு பதிலாக புதிய அறக்கட்டளையை அவர்களது நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிலுள்ள உறுப்பினர்களும் பழைய அறக்கட்டளைக்கு உள்ள சப்ளிமெண்ட் டீட் தான் வேண்டும் என்று கூறியதால், திரும்பவும் வந்து துணைப் பதிவாளரிடம், பழைய அறக்கட்டளைக்கு உள்ள சப்ளிமெண்ட் டீட் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு DR சுமார் 30 ஆயிரம் பணம் கேட்கிறார். அந்தப் பணத்தை நீங்கள் கொடுத்து விட்டால் உங்களுக்கு பழைய சப்ளிமெண்ட் டீட் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டார். நாங்கள் 2012 ஆம் ஆண்டு எங்கள் அறக்கட்டளையில் போடப்பட்ட ஒரு தீர்மான நகலை எடுத்து வைத்துக்கொண்டு சில தவறுகளை சுட்டிக்காட்டி சப்ளிமெண்ட் டீட் கையெழுத்து போட முடியாது. அதில் சட்ட சிக்கல் உள்ளது என்று கூறிவிட்டு பத்து தினங்கள் கழித்து ரெப்வியூசல் செக் லீபை கொடுத்து அறக்கட்டளையை நிராகரித்து உள்ளனர். தினசரி மாலை 6:00 மணி வரை என்னை சில நேரம் 9 மணி வரை என்னை காக்க வைத்து என்னை அலக்களிக்க வைத்து உள்ளனர். இதனால் எனது கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வந்துள்ளன். எனது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment