மதிமுக அமைப்புத் தேர்தலில் மீண்டும் மாவட்ட செயலாளராக செல்வராகவன் நியமனம். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 22 April 2023

மதிமுக அமைப்புத் தேர்தலில் மீண்டும் மாவட்ட செயலாளராக செல்வராகவன் நியமனம்.

 


மதிமுக அமைப்புத் தேர்தலில் மீண்டும் மாவட்ட செயலாளராக செல்வராகவன் நியமனம்.


மறுமலர்ச்சி திமுகவின் 5- வது அமைப்பு தேர்தல் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் தேர்தல் ஆணையாளர் மகபூப் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் மீண்டும் மாவட்ட செயலாளராக செல்வராகவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட அவைத் தலைவராக சுதர்சன், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, துணை செயலாளர்களாக நலந்தமயந்தி, முனியாண்டி, செந்தில்குமார்  உள்ளிட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தலைமை கழக செயலாளர் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்று கழக நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை வைத்து 

ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad