திண்டுக்கல், சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் சீண்டல் செய்த அசோக்குமார் என்பவரை சாணார்பட்டி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், அசோக்குமாருக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 7500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
No comments:
Post a Comment