கால்நடைகள் இறப்பு, தொடர்கதையாகவே உள்ளது: விவசாயிகள் கவலை. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 20 April 2023

கால்நடைகள் இறப்பு, தொடர்கதையாகவே உள்ளது: விவசாயிகள் கவலை.


திண்டுக்கல் அருகே, அடுத்தடுத்து மர்ம நோய் தாக்கி 20 மாடுகள் உயிரிழப்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், கால்நடை துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி பயன்படுத்துவோர் பீதி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு, சுக்காம்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்களின், பிரதான தொழில் கால்நடை வளர்ப்பது. இந்நிலையில், சில மாதங்களாக அடுத்தடுத்து தற்போது வரை 20 கறவை பசுமாடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து, விவசாயிகள் அப்பகுதியில் உள்ள கால்நடை அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். கால்நடை அலுவலர்கள் பெயர் அளவில் மற்றும் ஆய்வு செய்து உள்ளனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. 

கடந்த சில நாட்களாக, மாடுகளின் உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 மாடுகள் உயிரிழந்து உள்ளது. மாவட்ட நிர்வாகமும், கால்நடைத்துறை அதிகாரிகளும் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு மர்ம நோய் குறித்து கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad