கொடைக்கானலை சுற்றிப்பார்க்க ரூ.150 போதும்-சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டம்.
பொது போக்குவரத்து உதவியுடன் ரூ.150-க்கு கொடைக்கானலை சுற்றுப்பார்க்கும் விதமாக புதிய திட்டத்தை அரசு போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. அதன்படி கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி அப்பர் லேக் வியூ, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா வழியாக ஏரியில் சுற்றுலா பயணிகளை இறக்கி விடுகிறது. இதற்காக பெரியவர்களுக்கு ரூ.150-யும், சிறியவர்களுக்கு ரூ.75-யும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment