திண்டுக்கல்லில் விடுமுறை தினங்களில் ஹாக்கி பயிற்சி.
திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பட்டேல் ஹாக்கி அகடாமி தலைவர் ரமேஷ் பட்டேல் தலைமை தாங்கி விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை ஹாக்கி பயிற்சி முகாம் திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனி விளையாட்டுத் திடலில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்களுடைய புகைப்படங்கள், ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மலேசியாவில் நடைபெறும் பயிற்சி ஹாக்கி போட்டிக்கும், பெங்களூரில் நடைபெறும் பயிற்சி காக்கி போட்டிக்கும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுகளை திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சண்முகம் மற்றும் பயிற்சியாளர் ஞானகுரு ஆகியோர் வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். விளையாட்டில் ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு 93842 25810 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment