திண்டுக்கல் வெள்ளை பூண்டு வியாபாரி கொலை எதிரொலி- குற்றவாளி 2 பேருக்கு மருத்துவமனையில் அரிவாள் விட்டு.
திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் வெள்ளைப் பூண்டு வியாபாரி சின்னத்தம்பி கடந்த மாதம் 2-ம் தேதி சரமாரியாக அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ், விக்னு என்ற விக்னேஷ் இருவரும் விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில் மர்ம நபர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து மிளகாய் பொடி தூவி இருவரையும்
அறிவாளால் வெட்டினர். இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கியால் சுட முயற்சிக்கும்போது மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment