பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 24 April 2023

பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா

 


திண்டுக்கல் மலையடிவாரம் பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி சாமி காட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று ஏப்ரல்-23 கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. கொடிக்கம்பத்தில் தர்பை வைத்து மஞ்சள் துணியால் சுற்றப்பட்டு அம்மன் திருவுருவம் போதித்த கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பால கொம்பு கொடி மரத்தின் அருகில் ஊன்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாளை 24ந்தேதி பூத்தேர் ஊர்வலம், 28ஆம் தேதி மின் அலங்கார ரதபவனி 29ஆம் தேதி பால்குடம் எடுத்தல், மே 1ஆம் தேதி பூக்குழி இறங்குதல் மே ஐந்தாம் தேதி தெப்பக்குளத்தில் தேரோட்டம் ஆகிய முக்கிய நிகழ்வுடன் திருவிழா தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad