திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான, கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திண்டுக்கல் மேற்கு மாவட்டம் கழகம் சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலை கழக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர், குளிர்பானங்களையும், பழங்களையும் வழங்கினார். உடன் கழக அமைப்பு செயலாளர் வி.
மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி பரமசிவம், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி.எஸ்.ராஜமோகன், அபிராமி கூட்டுறவு மண்டகசாலை தலைவர் பாரதி முருகன், துணைத் தலைவர் வி.டி.ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ரவிக்குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் பழனிசாமி, முன்னாள் ஆவின் சேர்மன் திவான் பாட்சா, பொதுக்குழு உறுப்பினர் இக்பால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment