உலக புத்தக தின விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.
உலகப் புத்தக தின விழா திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில் முதல் நிலை நூலகர் சக்திவேல் வரவேற்றார். நூலக ஆய்வாளர் வள்ளி, நூலிருப்பு சரிபார்ப்பு அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முதுநிலை பேராசிரியர் தியாகராஜன், கவிஞர் குயிலன் ஆகியோர் புத்தகம் வாசிப்பது குறித்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் மாணவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிறைவாக இரண்டாம் நிலை நூலகர் சுகுமார் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment