ஒத்தை பனைமரம் புனித பெரிய அந்தோணியார் ஆலயம் திறப்பு.
திண்டுக்கல் முத்தழகுப்பட்டி பகுதியில் உள்ள ஒத்தை பனைமரம் புனித பெரிய அந்தோணியார் ஆலயம் திறப்பு விழா ஏப்ரல்-23 ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பங்குத்தந்தைகளின் கூட்டு திருப்பலி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் காலை முதல் மாலை வரை வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதான காரர்கள், ஊர் டிரஸ்ட் மெம்பர்கள், ஊர் பொதுமக்கள், அருட்சகோதரிகள், ஒத்தை பனைமரம் புனித அந்தோணியார் வாலிபர் சங்கம் ஆகியோர் செய்திருந்தனர். இவ்விழாவில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு புனித அந்தோணியாரை வணங்கி சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment