திண்டுக்கல்லில் வேலு நாச்சியார் சேனை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் வேலு நாச்சியார் சேனை நிர்வாகிகள் கலந்தாய் கூட்டம் நடந்தது. இதற்கு டாக்டர் ஜெயவனிதாமணி தலைமை தாங்கினார். பிரேமா வரவேற்றார்.
இதில் மஞ்சுளா, சுதா மீனாட்சி, அய்யம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முக்குலத்து தேவர் நலச்சங்க செயலாளர் அழகர் ராஜ், வனராஜ், செந்தில்குமார், ஊடகவியலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கி ஊர்வலம் நடத்துவது எனவும், கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் அமைப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக சத்யா நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment