தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரத்தை சீரமைத்து முதல்வர் அமல்படுத்த வேண்டும் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 25 April 2023

தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரத்தை சீரமைத்து முதல்வர் அமல்படுத்த வேண்டும்

 


தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரத்தை சீரமைத்து முதல்வர் அமல்படுத்த வேண்டும்- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திண்டுக்கல்லில் பேட்டி.



திண்டுக்கல்லிற்கு இன்று 25.04.23 வருகை தந்த  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா  செய்தியாளரிடம் பேசுகையில் :-  வருகிற மே-5ம் தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழங்க மாநாடு மற்றும்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பல்வேறு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர் சொந்தங்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரத்தை தமிழக முதல்வர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இதனை உடனடியாக சீரமைத்து உடனடியாக அமல்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. முதலாளிகள் இல்லாமல் தொழிலாளர்கள் இல்லை. இப்பொழுது பல இடங்களில் தற்போது தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு அதற்கான ஊதியம் கொடுத்து வருகிறோம்.  தமிழகத்தில் அதிகமான வெளிநாட்டு தொழிற்சாலைகள் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 12 மணி நேர வேலையில் தொழிலாளர்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் பாதிப்புகள் ஏற்பட்டால் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த வேண்டியது தான். நியாயமான கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். நாடு முன்னேறும் போது இதுபோன்ற இடர்பாடுகள் ஏற்படுவது சகஜம். இதை எல்லாம் தாண்டி தமிழக முதல்வர் விரைவாக 12 மணி நேர வேலைக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். உடன் மண்டல தலைவர் கிருபாகரன், மாவட்ட செயல் தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் அழகு, மாவட்ட பொருளாளர் நஜிர்சேட் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad