திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஏப்ரல் -26 நாளை நடைபெறும் போக்சோ சிறப்பு நீதிமன்ற திறப்பு விழாவை திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் புறக்கணிப்பு-மாவட்ட தலைவர் செந்தில்குமார் பேட்டி.
திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று 25.04.23 தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏப்ரல் -26 நாளை நடைபெறும் போக்சோ சிறப்பு நீதிமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாவட்ட தலைவர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நாளை சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றமான போக்சோ நீதிமன்ற திறப்பு நடைபெற உள்ளது. இதில் வெளிமாநிலங்களில் தகுதியில்லாத சட்ட கல்லூரிகளில் படித்து, தங்களை வழக்கறிஞர்களாக காட்டிக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கத்திற்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் விழாவை புறக்கணிப்பது என ஏக மனதாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் விழாவில் மாவட்டம் முழுவதும் உள்ள 650 வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு செய்ய உள்ளனர். மேலும் தகுதி இல்லாத வழக்கறிஞர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். வழக்காடிகள் போலி வழக்கறிஞர்களை இனம் கண்டு அவர்களை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார். உடன் சங்க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment