திண்டுக்கல் - பாலக்காடு ரயில் பாதை புதிதாக ரூ.242 கோடி செலவில் மின்மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி துவக்கி வைத்தார் .
திண்டுக்கல்- பழனி- பாலக்காடு வரையிலான 179 கிலோமீட்டர் தூரம் அகல ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் ரூ. 242 கோடி செலவில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருவனந்தபுரத்திலிருந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி பாலக்காடு - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட ரயிலை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, டிவிசனல் மேலாளர் ஆனந்த் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment