திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 கீழ் வழக்குகளின் பிரத்தியோக விசாரணைக்கான போக்சோ சிறப்பு நீதிமன்றத்தை இன்று 26.04.23 முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், போக்சோ நீதிமன்ற நீதிபதி கருணாநிதி திண்டுக்கல் மற்றும் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவகாடாசம் பேசுகையில் :- திண்டுக்கல் மாவட்டத்தில் போக்சோ வழக்குகள் அனைத்தும் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது தற்பொழுது வழக்குகள் அதிகமாக இருப்பதால் புதிதாக போக்சோ நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு 228 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் 258 வழக்குகள் நிலுவையில் உள்ளது என பேசினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment