திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் விளக்கம். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 26 April 2023

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் விளக்கம்.

 


திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் விளக்கம்.


திண்டுக்கல் வர்த்தக சங்க கட்டிடத்தில் இன்று 26.04.23  ரயில்வே துறை சார்பில் வர்த்தகர் சங்கங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ரயில்வே கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் ரதிபிரியா தலைமை வகித்தார். கூட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்

ப.வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் திண்டுக்கல் வர்த்தகர் சங்க தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் திண்டுக்கல், பழனி வர்த்தக சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம், தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில், ரயில்வே மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளரிடம் திண்டுக்கல்- சென்னை இடையே தனியாக ரயில் இயக்கவேண்டும், திண்டுக்கல் ரயில்நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துச்செல்ல டிராலி வசதி செய்துதரவேண்டும், திண்டுக்கல் ரயில்நிலையத்தில் மேற்கூரைகள் முழுமையாக இல்லாததால் ரயிலுக்காக பயணிகள் காத்திருக்கும் இடங்களில்  வெயில், மழையால் பாதிக்கப்படுகின்றனர். ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை. மேலும் தரமான உணவகங்கள் அமைக்கவேண்டும், அதிக அளவில் பயணிகள் வந்து செல்வதால் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு எஸ்கலேட்டர் வசதி செய்து தரவேண்டும். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்களை அதிகம் பொருத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனைத்து நடைமேடைகளிலும் அமைக்கவேண்டும். திண்டுக்கல் ரயில்நிலையத்தின் முகப்பு தோற்றத்தை அழகுபடுத்த வேண்டும். திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லக்கூடிய ரயில்களில்

முன்பதிவு இல்லாத பெட்டிகள் திண்டுக்கல்லுக்கு என தனியாக ஒதுக்கவேண்டும், என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதேபோல் திருச்சி வழியாக பழநி- சென்னை இடையே ரயிலை இயக்கவேண்டும். பழநி- திருச்சி இடையே தினமும் ரயில் இயக்கவேண்டும். பழநியில் புதுதாராபுரம் சாலையில் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இங்கு மேம்பாலம் அமைத்துதரவேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை கூட்டத்தில் வலியுறுத்தினர். கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து நிறைவேற்றுவதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக ப.வேலுச்சாமி எம்.பி., தெரிவித்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad