மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரஸார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி சிறை தண்டனை மற்றும் எம்பி பதவி பறிப்பை கண்டித்து திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முகமது சித்திக், மச்சக்காளை, குப்புசாமி, அம்சவல்லி, துணை தலைவர் அப்துல் ரகுமான், பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் அலியார், மாணவர் காங்கிரஸ் தலைவர் அமீர் அம்ஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment