திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து மர்ம நோய் தாக்கி 20 மாடுகள் உயிரிழப்பு.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு, சுக்காம்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்களின் பிரதான தொழில் கால்நடை வளர்ப்பது. இந்நிலையில் சில மாதங்களாக அடுத்தடுத்து தற்போது வரை 20 கறவை பசுமாடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து விவசாயிகள் அப்பகுதியில் உள்ள கால்நடை அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். கால்நடை அலுவலர்கள் பெயரளவில் மற்றும் ஆய்வு செய்து உள்ளனர். என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. கடந்த சில நாட்களாக மாடுகளின் உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 மாடுகள் உயிரிழந்து உள்ளது. மாவட்ட நிர்வாகமும், கால்நடைத்துறை அதிகாரிகளும் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு மர்ம நோய் குறித்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment