திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்து ரூ.11,500 அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர்(பொறுப்பு) செபாஸ்டின் தலைமையில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, ரெங்கராஜ், மாசு கட்டுப்பாட்டு வாரிய இளநிலை உதவி பொறியாளர் திவ்யா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் திண்டுக்கல் மேற்குரத வீதி பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் என 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 11,500 அபராதம் விதித்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் பொருள் மீண்டும் பயன்படுத்தினால் அதிகமான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment