அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கம்.
ஏப்ரல் 17 முதல் அனைத்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவங்கியது. இந்த வாகனத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவு திட்டம், 7.5% இட ஒதுக்கீடு, புதுமைப் பெண் திட்டம், தேன் சிட்டு, வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்பட விழாக்கள், இலக்கிய மன்ற செயல்பாடுகள், வானவில் மன்றம், கலைத் திருவிழா, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா, இல்லம் தேடி கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டத்தில் விரும்பிய துறையை தேர்ந்தெடுப்பது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தனி சிறப்பு மையங்கள் இது அனைத்தும் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பிரச்சார வாகனம் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. பொதுமக்களும் ஆர்வமாக வாங்கி படித்தனர். இந்தப் பிரச்சார வாகனத்தை தொழில் கல்வி இணை இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் மாணவர்கள் கொடியை சேர்த்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன், தொடக்கக்கல்வி அலுவலர்கள் வளர்ம,தி ஜெகநாதன், உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ், திருப்பதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரச்சார வாகனம் திண்டுக்கல் மாவட்டத்தில் 8 நாளைக்கு 80 பள்ளிகள் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment