ஆயர் பேரவை சார்பில் முதலமைச்சருக்கு நன்றி.
தமிழக ஆயர் பேரவை பட்டியலினத்தார் /பழங்குடியினர் பணிக்குழு தலைவர் தாமஸ் பால்சாமி திண்டுக்கல் பத்திரிக்கையாளரிடம் கூறுகையில்:- கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களை பட்டியலினத்தில் சேர்த்து அவர்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 19.4.23 அன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு பேரவை சார்பில் நன்றி தெரிவித்தனர். மேலும் இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் தருவார்கள் என நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறினார். உடன் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment