திண்டுக்கல் மாநகராட்சி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தரமற்ற தளத்தால் வாகன ஓட்டிகள் அவதி.
திண்டுக்கல் மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது காமராஜர் பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு சென்று வருகிறது. இந்நிலையில் வெளியூருக்கு பணிக்கு செல்பவர்கள் திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான
புதிதாக கட்டப்பட்ட கடைகளின் அடிப்பகுதியில் இருச்சக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு தரமற்ற முறையில் தளம் போடப்பட்டதால் வாகனங்களில் மிகவும் தூசி அடைகிறது. இதுகுறித்து எத்தனையோ முறை கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என புலம்புகின்றனர் வாகன ஓட்டிகள். அதனால் தரையை நன்றாக செப்பனிட்டு முறையாக பராமரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment