பருவநிலை மாற்றத்தால் மிளகு விளைச்சல் குறைவு-விவசாயிகள் கவலை.
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் பழையூர், புதூர், தென்மலை, தாளக்கடை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் அதிகளவில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் பல இடங்களில் மிளகு விளைந்தாலும், சிறுமலை மிளகுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் மிளகு விற்பனைக்கு செல்கிறது.
மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதம் தான் அறுவடை நடக்கும். கடந்தாண்டு நல்ல விளைச்சல் கண்ட நிலையில், இந்தாண்டு பருவ நிலை மாற்றத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஒரு டன்னுக்கும் மேல் மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது 200 கிலோ முதல் 300 கிலோ வரை மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. தற்போது ஒரு கிலோ மிளகு ரூ.550 முதல் ரூ.600 வரை விலை கொடுத்து வியாபாரிகள் மொத்தமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். மிளகின் விலை குறைந்த நிலையில் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு .....
No comments:
Post a Comment