திண்டுக்கல், சாமியார்பட்டியில் சாமி கும்பிடு விழாவில், மயானகாளி வேடம் அணிந்து பக்தி பரவசம்
திண்டுக்கல் அடுத்த கீழக்கோட்டை கிராமம் சாமியார்பட்டியில் காளியம்மன், துர்க்கை அம்மன் கோயில் சாமி கும்பிடு விழா நடைபெற்றது. கடந்த 31ம் தேதி இரவு கரகம் ஜோடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை வீதி உலா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அக்னி சட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. மூன்று நாள் திருவிழாவின் நிறைவு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது மயான காளி வேடம் அணிந்து பக்தி பரவசத்தில் ஆடியது, அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் ஆஞ்சநேயர் புலி கரடி ஆகிய வேலமடைந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராமத்தின் முக்கிய சாலைகள் வழியாக முளைப்பாரி வீதி உலா நடைபெற்று, கோவில் கிணற்றில் கரைக்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment