திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில்
வெற்றி பெற்ற 27 வீரர்களுக்கு 41 கிராம் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.
தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி கடந்த மாதம் ஒரிசாவில் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இதில் சீனியர் பிரிவில் திண்டுக்கலை சேர்ந்த மோனா ஸ்ரீ நீலகிரியை சேர்ந்த அருள்அரசி ஆகியோர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் மேலும் இவர்கள் ஆசிய அளவில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்க உள்ளனர் இவர்களை பாராட்டும் வகையில் திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்கம் மற்றும் அணில் சேமியா சார்பில் இரண்டு பேருக்கும் தலா 2.5 கிராம் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் தேசிய அளவில் நடைபெற்ற போட்டி சீனியர், ஜூனியர், சப் ஜூனியர், மற்றும் கேடட் என 4 பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் முதலிடம், இரண்டாவது இடம், மூன்றாவது இடம் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களை பாராட்டு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் திண்டுக்கல்லில் இன்று 02.04.23. மாவட்ட தேக்வாண்டோ சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு 2.5கிராம் தங்க காசு, 2 வது இடத்தைப் பிடித்தவர்களுக்கு 1.5 கிராம் தங்க காசு, மற்றும் 3வது இடம் பிடித்தவர்களுக்கு ஒரு கிராம் தங்க காசு என மொத்தம் 41 கிராம் தங்க காசுகள் மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட செயலாளர் ஜோதிபாசு செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment