பங்குனி உத்திர திருவிழா: திண்டுக்கல் முருகன் கோவில் தேரோட்டத்தை மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துவக்கி வைத்தார்
தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் விஷேசமா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி திண்டுக்கல் ஓய் எம் ஆர் பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலை பால் குடம் எடுத்து 800க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருகன் வீட்டிலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை அடுத்து இன்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. பட்டுடுத்தி ராஜ அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. தேரோட்டத்தை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டு தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற எதிர் கட்சி தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு தலைவர் பாரதி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment