ராமதேவ மகரிஷிக்கு வரமளித்த வடமதுரை சௌந்தரராஜ பெருமாள்
திண்டுக்கல் அடுத்த வடமதுரையில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலின் 102-ம் ஆண்டு பங்குனி திருவிழா திண்டுக்கல் நாகல் நகரில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று காலை பெருமாளுக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பின்னர் பெருமாள் ராஜ அலங்காரத்தில் பல்லாக்கில் பல்லக்கில் திண்டுக்கல்லுக்கு புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முள்ளிப்பாடியில் நேற்று இரவு தங்கினார். அதன்பின்னர் இன்று (வியாழக்கிழமை) பெருமாள் முள்ளிப்பாடி சந்தானவர்தினி நதியில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளித்தார். தொடர்ந்து இன்று இரவு புஷ்ப விமானத்தில் புறப்பாடாகி மேட்டுராஜக்காபட்டியில் தங்குகிறார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பாடாகி திண்டுக்கல் நாகல் நகர், பாரதிபுரம், என்.ஜி.ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் குதிரை மற்றும் கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.. அதன்பின்னர் ஏப்ரல் 12-ஆம் தேதி என்.ஜி.ஓ காலனியில் இருந்து கள்ளர் வேடம் தரித்து, புஷ்ப பல்லக்கில் புறப்பாடாகி மறுநாள் சன்னதியை வந்தடைகிறார். இந்த பங்குனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் விஸ்வநாத், செயல் அலுவலர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொள்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment