பொதுமக்கள் சிறப்பு குறைதீர்வு முகாம் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு - திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள், டிஎஸ்பி அலுவலகங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களிடம் இன்று 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பொதுமக்கள் தங்களின் குறைகள் குறித்த புகார்களை சிறப்பு முகாமில் தெரிவிக்க அறிவுறுத்தியதின் பேரில், மாவட்டம் முழுவதும் இடப்பிரச்சினை சம்பந்தமாக 71 மனுக்களும், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக 34 மனுக்களும், குடும்ப பிரச்சினை சம்பந்தமாக 26 மனுக்களும் மற்றும் இதர வகையில் 84 மனுக்களும் மொத்தம் 215 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இம்மனுக்களுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment