நத்தம் முதல் மதுரை வரை 4 வழி சாலையை பிரதமர் துவக்கி வைத்ததற்கு நன்றி தெரிவித்து நத்தம் 4 வழி சாலையில் பாஜகவினர் நன்றி தெரிவித்து கோஷமிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முதல் மதுரை வரை நான்கு வழி சாலையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாஜக மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் நத்தம் நான்கு வழி சாலையின் மீது நின்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேனர்கள் வைத்து கோஷமிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கர், நத்தம் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத், வடக்கு ஒன்றிய தலைவர் அகில் நாயுடு,
மாவட்ட துணை தலைவர் வீரஜோதி, மாவட்ட செயலாளர் சபாபதி, சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தலைவர் செல்லத்துரை, திண்டுக்கல் தெற்கு ஒன்றிய தலைவர் முத்துவேல் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment