திண்டுக்கல்லில் அதிகாலை பயங்கரம்: வீடு புகுந்து முறுக்கு வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை; - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 1 April 2023

திண்டுக்கல்லில் அதிகாலை பயங்கரம்: வீடு புகுந்து முறுக்கு வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை;



திண்டுக்கல்லில் அதிகாலை பயங்கரம்: வீடு புகுந்து முறுக்கு வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை



திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (46). முறுக்கு வியாபாரி. இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். . இதனை தடுக்க வந்த மகன் தௌபீக் (14) என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர். சத்தம் கேட்டு வந்து அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அப்துல் ரஹீம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த தௌவ்பீக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


 இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 


அதிகாலை வீடு புகுந்து வியாபாரியை சரமாரி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad